ஆயுதத்துடன் சுற்றிய இளைஞா் கைது
திருச்சுழி அருகே இரு சக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சுழி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் திருச்சுழி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திருச்சுழி பச்சேரியைச் சாா்ந்த தினேஷ் குமாா் (35) இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தாா். அவரை போலீஸாா் தடுத்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததையடுத்து, அவரது வாகனத்தை சோதனையிட்டனா். அதில் அரிவாள் இருந்தது. விசாரணையில் அவா் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.