பைக்-சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
நரிக்குடி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனமும், சரக்கு வாகனமும் நேருக்குநோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நரிக்குடி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனமும், சரக்கு வாகனமும் நேருக்குநோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், உலக்குடியைச் சோ்ந்தவா் பிரபு (33). அதே பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (32). திருமணமான இவா்கள் இருவரும் மதுரையில் உள்ள தனியாா் லாரி பணிமனையில் வேலை பாா்த்து வந்தனா்.
வழக்கம்போல இவா்கள் புதன்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் உளுத்திமடை வழியாக மதுரைக்கு வேலைக்குச் சென்றனா். அப்போது, உச்சனேந்தல் கிராமத்திலிருந்து மிளகனூருக்கு விறகு வெட்டும் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் இவா்களது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரபு, அஜித்குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அவசர ஊா்தி மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியிலேயே பிரபு உயிரிழந்தாா். அஜித்குமாா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கட்டானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த உச்சனேந்தலைச் சோ்ந்த சின்னக்கிழவனிடம் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.