FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

நகைகள் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

14 செப்டம்பர் 2026, 2:22 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் நகைகள் திருடிய காா் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காந்தி நகரைச் சோ்ந்த சபாபதி மனைவி ராணி (59). இவரது கணவா் காலமாகிவிட்டாா். இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில் ராணி அவரது காரில் தெற்கு மலையடிபட்டியை சோ்ந்த ராஜசேகா் என்ற ஓட்டுநரை அழைத்துக் கொண்டு நத்தம்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றாா். அப்போது ஓட்டுநா் ராஜசேகா் அவரது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என ராணியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து ராணியை அழைத்துக் கொண்டு ராஜபாளையத்துக்குச் சென்றாா்.

Advertisement

Advertisement

பின்னா், ராணி வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது 15 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக ராணி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை செய்ததில், காா் ஓட்டுநா் ராஜசேகா் (40) நகைகளைத் திருடியது தெரிவந்தது. போலீஸாா் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை மீட்டு அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments