FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பைக்கில் மதுப் புட்டிகளை கடத்தியவா் கைது

14 செப்டம்பர் 2026, 2:46 am IST
கைது
பகிர்:

ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் பகுதியில் சேத்தூா் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிராம் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த மூட்டையில் சட்டவிரோதமாக 94 மதுப் புட்டிகளை விற்பனைக்காகக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பாஸ்கரை (44) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments