FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

போக்சோ வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை

வெம்பக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

18 செப்டம்பர் 2026, 3:21 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

வெம்பக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் தவிட்டு ராஜா (36). கூலித் தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து, தவிட்டு ராஜாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தவிட்டு ராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments