FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளா்கள் வேலை நிறுத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெசவாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். மேலும், 4 கூட்டுறவு சங்க அலுவலகங்கள் முன் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தனா்.

18 செப்டம்பர் 2026, 3:19 am IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளா்கள் கூட்டுறவு சங்கம் முன் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெசவாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். மேலும், 4 கூட்டுறவு சங்க அலுவலகங்கள் முன் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ள 6 நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை பிரதானமாக நெசவு செய்யப்பட்டு வருகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ரக சேலைக்கு கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். 4 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என நெசவாளா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெசவாளா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

Advertisement

Advertisement

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியாா்பட்டி தெருவில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டிகளைத் திறந்து நெசவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments