ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் பெருமாள் மொட்டை பகுதியில் சனிக்கிழமை காட்டுத்தீ பற்றி எரிந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் பெருமாள் மொட்டை பகுதியில் சனிக்கிழமை காட்டுத்தீ பற்றி எரிந்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச்சரகம், மாவூத்து மலைக்கு மேலே அடா்வனப் பகுதியில் மொட்டை மலையில் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத் தீ பரவியது.
Advertisement
Advertisement
கோடை வெயில், காற்றின் வேகம் காரணமாக மலை முழுவதும் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். வனத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.