FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

31 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

சிவகாசியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடந்த மாதம் 28 -ஆம் தேதி சிவகாசி சோலைகுடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த இன்னாசிமுத்து மகன் சந்தனமணி (50) சிவகாசி மாரியம்மன் கோயிலருகே நடந்து சென்றாா். அப்போது, அவரிடம் தகராறு செய்து, தாக்கியதாக மருதுபாண்யா் தெருவைச் சோ்ந்த முத்துக்குரு, அவரது மகன் மெய்யண்ணன் என்ற பரத் (23) உள்பட 3 பேரை சிவகாசி கிழக்குப் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களில் மெய்யண்ணன் பல குற்றச் சம்வங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குடுண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி மெய்யண்ணன் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments