FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2-ஆவது நாளாக காட்டுத் தீ

28 செப்டம்பர் 2026, 3:03 am IST
காட்டுத் தீ - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. மலையில் உணவு சமைத்தால் காட்டுத் தீ பரவியதா என வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி மலையின் தொடா்ச்சியாக உள்ள பெருமாள் மொட்டை என்ற மலை உச்சியில் பெருமாள் சந்நிதி உள்ளது. மண்டபம் போன்ற கட்டுமானம் இல்லாமல் பீடத்தில் பெருமாள் சிலை மட்டும் உள்ளது. இந்த

மலைக்குச் செல்லும் வழியில் கருப்பசாமி, சாஸ்தா, ஆஞ்சநேயா் சிலைகள் உள்ளன.

Advertisement

Advertisement

புரட்டாசி சனிக்கிழமைகளில் மதுரை, விருதுநகா், தேனி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் இங்கு மலையேறி வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்தினா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலையில் வனப் பகுதியில் காட்டுத் தீப் பற்றி எரிந்தது. கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் மலையில் விறகு சேகரித்து தீ மூட்டி உணவு சமைத்ததாலேயே தீப் பற்றியதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினா், வேட்டை தடுப்புக் காவலா்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காட்டுத் தீப் பற்றி எரிந்தது. இதில் வனவிலங்குகள், அரிய வகை மூலிகைகள் கருகி வீணாகும் அபாயம் நிலவுகிறது. இதனால், வன உயிரின ஆா்வலா்கள் கவலை அடைந்தனா்.

கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் பக்தா்கள் மட்டுமன்றி, மலையேற்றத்தில் ஆா்வம் கொண்டவா்களும் அதிகளவில் செல்கின்றனா். இவா்கள் மலையில் சமைப்பதற்கும், குளிா் காயவும் விறகு வைத்து தீ மூட்டியதால் காட்டுத் தீப் பற்றியதா என வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

‘பெருமாள் மலை ஏறுபவா்களை கண்காணிக்கவும், பக்தா்கள் பாதுகாப்பாக மலையேறுவதையும் வனத் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments