FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

கேமராக்களை சேதப்படுத்திய இருவா் கைது

கைது
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கண்காணிப்பு க் கேமராக்களை சேதப்படுத்திய இரு இளைஞா்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை கண்காணிப்பதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

அதில் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 2 கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தன. சிசிடிவி கேமராக்களின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு மூன்று இளைஞா்கள் சோ்ந்து கண்காணிப்புக் கேமராக்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

மேலும், விசாரணையில் அவா்கள், சேத்தூா் ஐந்து கடை பஜாா் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (22), ஈஸ்வர பாண்டியன்(20) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் இதுதொடா்பாக முகவூரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ஜெயகோவிந்தராஜைத் (20) தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments