க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதிலும் முறைகேடு! மக்களே கவனம்
க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதிலும் முறைகேடு நடப்பதால் மக்களே கவனமாக செயல்பட வேண்டும்...
முன் பின் தெரியாதவர்களின் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்ததும், எண்ணற்ற யுபிஐ பதிவுகளுக்கான கோரிக்கைகள் வந்து கொண்டே இருப்பதன் மூலம், தவறுதலாக ஏதேனும் ஒரு கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, சந்தேகத்துக்கு உரிய இடத்தில் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதற்கு பதிலாக, உரிய நபரிடம் செல்போன் எண்ணைப் பெற்று பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
அண்மையில், சிலருக்கு க்யூஆர் கோடு ஸ்கேன் செய்ததும், அடையாளம் தெரியாத எண்களிலிருந்து யுபிஐ பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வந்துகொண்டே இருப்பதாகவும், கவனிக்காமல் ஏதேனும் ஒரு கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கினாலும் அதன் மூலம் பணமோசடி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
Advertisement
Advertisement
எனவே, இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்பட்டால், உடனடியாக எந்தக் கோரிக்கையையும் ஏற்காமல் நிராகரித்து விடுவது நலம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
பணப்பரிமாற்றத்தை எளிமையாக்க கொண்டு வரப்பட்ட க்யூஆர் கோடு மூலம் ஏராளமான மோசடிகளும் நடப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.