FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய பெரு நகர மக்களின் வாழ்முறை! சென்னை மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்திய பெரு நகர மக்களின் வாழ்முறை பற்றி ஆய்வில் சென்னை மக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

3 செப்டம்பர் 2026, 11:36 am IST
- கோப்புப் படம்
பகிர்:

இந்திய நாட்டின் பெரு நகர மக்களின் வாழ்முறை பற்றிய பிஆர்ஐசிஇ-டாடா 100 நகரங்களின் ஆய்வுகள் வெளியாகியிருக்கிறது. இதில், சென்னை மக்கள் வாழ்முறை பற்றிய விரிவான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

நாட்டிலேயே பெங்களூர் நகர மக்கள்தான் அதிக வருவாய் ஈட்டுவோராக உள்ளனர். அதேவேளையில், நாட்டில் அதிகம் சேமிக்கும் மக்களைக் கொண்ட நகரமாகவும் பெங்களூர் இடம்பெற்றுள்ளது.

சத்தீஷ்கர் மாநில மக்கள் அதிகம் செலவிடுகிறார்களாம். தில்லி மிகப்பெரிய சந்தைக்கான நகரமாக அமைந்துள்ளதாம். தில்லி மக்கள் சராசரியாக சம்பாதித்து சராசரிக்கும் குறைவாக செலவிடுவதில் கெட்டிக்காரர்கள் என்கிறது ஆய்வுகள்.

Advertisement

Advertisement

மும்பை நகரம், மிகப் பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரமாக ஜொலிக்கிறதாம்.

இப்படியே சொல்லிக் கொண்டு வரும்போது, சென்னை பற்றிய ஆய்வு முடிவுகள் கூறுவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அதாவது, சென்னை மக்கள் அதிகம் கடன் வாங்குவோராக உள்ளார்களாம். நகரின் பலதரப்பு மக்களும் அவர்களது வருமானத்துக்கு ஏற்ற விகிதத்தில் அதிகக் கடன் வாங்குவோராக உள்ளனர். ஆனால், அதற்காக சென்னை மக்கள் அனைவரும் கடன்காரர்கள் என்றோ, பொருளாதாரத்தில் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்றோ அர்த்தமல்ல.

வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் சென்னை 27.7 சதவிகிதத்துடன் மற்ற நகரங்களைக் காட்டிலும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், ஹைதராபாத், பெங்களூர் நகர மக்கள் அதிக வருவாய் ஈட்டினாலும் 15 மற்றும் 14 என்ற விகிதத்தில்தான் கடன் பெறுகிறார்களாம். அவர்கள் அதிகம் வருவாய் ஈட்டுவதால் கடன் பெறுவது குறைவாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எனினும் சொத்துகள் வாங்குவது போன்றவற்றுக்காகவே சென்னை மக்கள் அதிகம் கடன் வாங்கி, அவற்றை மாதத் தவணை எனப்படும் இஎம்ஐ-ஆக கட்டி வருகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

வருவாய் ஈட்டுவதில் ஆறு பெரு நகரங்களில் 5வது இடத்தில் உள்ளது சென்னை.

summary

The lifestyle of people in India's major cities! How do the people of Chennai live? A shocking report.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments