FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

காத்திருந்த கண்களே... கவி எழுதும் நெஞ்சமே..!

நம்ம ஊர் ஜுமாட்டோ உணவு விநியோக ஊழியர் போன்ற தொழிலாளி வாங் ஜிபிங்.

Updated On : 26 ஜூலை 2026, 4:03 am IST
பகிர்:

ஆர்.எஸ்.

நம்ம ஊர் ஜுமாட்டோ உணவு விநியோக ஊழியர் போன்ற தொழிலாளி வாங் ஜிபிங். ஐம்பத்து நான்கு வயதான இவர், சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் குன்சன் நகரில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு நுகர்வோர் தவறான முகவரியை தந்திருந்தார். அலைய வேண்டியதாயிற்று. 18 மாடிகள் ஏறிச் சென்று உணவை வழங்கியபோது, அந்த நுகர்வோர் கடிந்து கொண்டார். இந்தச் சம்பவம்தான் அவரை கவிதை எழுத வைத்தது.

இருநூற்றுக்கும் மேற்பட்ட உணவு விநியோகத் தொழிலாளர்களின் அனுபவத்தைப் பகிரும் அவரது கவிதைத் தொகுப்பு 2024-ஆம் ஆண்டு வெளியாகி, அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இவரது 'தாழப் பறத்தல்' என்ற கவிதைத் தொகுப்புக்கு இப்போது சீனாவின் சிறந்த இலக்கிய விருதாகிய 'லூ ஜுன் விருது' கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

'உயரத்தில் இருந்தால்தான் பறப்பது என்று யார் சொன்னது, தாழப் பறந்தாலும் பறத்தல்தான்' என்ற வரிகள் சாதாரண தொழிலாளர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது. இதுவரை 6 ஆயிரம் கவிதைகளை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments