ஐஸ்கிரீம் பெட்டியில் உயிருடன் இருந்த எலி! வைரலாகும் விடியோவால் அதிர்ச்சி!
இணைய வழி உணவு விநியோக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பெட்டியில் எலி இருந்தது குறித்து...
மகாராஷ்டிர மாநிலம் தாணே பகுதியில் இணைய வழி உணவு விநியோக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பெட்டியில் எலி ஒன்று உயிருடன் இருந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பையில் உணவு ஒன்றில் கரப்பான்பூச்சி இருந்த நிலையில், தற்போது ஐஸ்கிரீம்கள் அடுக்கப்பட்ட பெட்டிக்குள் எலி இருந்துள்ளது.
உணவு விநியோகம் செய்துவருவதைப்போல, மளிகைப் பொருள்களையும் விநியோகம் செய்து வருகிறது பிளிங்கிட் நிறுவனம். மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்திற்குட்பட்ட உள்ள கல்யாண் கோத்ரேஜ் ஹில் பகுதியில் செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தின் விற்பனை முனையத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பெட்டிக்குள் எலி ஒன்று உயிருடன் இருந்துள்ளது.
Advertisement
Advertisement
ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அந்நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்ற சில இளைஞர்கள் இதனைக் கண்டுள்ளனர். உடனே அதனை விடியோ பதிவு செய்து இணையத்திலும் பகிர்ந்துள்ளனர்.
இந்த விடியோ பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், குழந்தைகள் உண்ணும் உணவுப் பொருள்களை அஜாக்கிரதையாக வைத்திருந்த உணவு விநியோக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இத்தகைய நிறுவனங்களின் நேரில் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இணையத்தில் ஆர்டர் செய்து பெறப்படும் உணவுப் பொருள்கள், விநியோகம் செய்யப்படுவதற்கு முன்பு அவை எத்தகைய சூழலில் வைக்கப்பட்டிருந்தன என்ற கேள்வியையும் இந்த விடியோ எழுப்பியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Rat Found In Blinkit Ice Cream Freezer In Thane
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.