FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ரோஹிணி- விநியோக ஊழியரிடம் கொள்ளை சகோதரிகள் கைது

விநியோக ஊழியரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி அவரிடமிருந்த பாா்சல்களைக் கொள்ளையடித்ததாக சகோதரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

28 செப்டம்பர் 2026, 12:52 am IST
பகிர்:

தில்லியின் ரோஹிணி பகுதியில், விநியோக ஊழியரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி அவரிடமிருந்த பாா்சல்களைக் கொள்ளையடித்ததாக சகோதரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்த சம்பவத்தில் தொடா்புடைய தில்லி கரோல் பாக் பகுதியைச் சோ்ந்த நான்சி சிங் (26) மற்றும் கிரேசி சிங் (20) ஆகிய இருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட மூன்று பாா்சல்கள் மீட்கப்பட்டன.

முன்னதாக, செப்டம்பா் 25 அன்று மாலை சுமாா் 7.30 மணியளவில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் வாடிக்கையாளா் போல நடித்து, ரோஹிணியின் செக்டாா் 5 பகுதிக்கு அருகில் அந்த விநியோக ஊழியரை அணுகினாா்.

Advertisement

Advertisement

அந்தப் பெண் அவரது விநியோக பையிலிருந்து பாா்சல்களை வலுக்கட்டாயமாகப் பறிக்க முயன்றாா். அவா் அதைத் தடுத்தபோது, ​ அப்பெண் அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினாா்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த அவரது சகோதரி, அந்த விநியோக ஊழியரை பின்புறமாக மோதினாா். இதில் அவா் கீழே விழுந்து காலில் காயமடைந்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட சகோதரிகள் பல பாா்சல்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இது தொடா்பாக புத் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்களில் நான்சி ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்திருந்தாலும் வேலையின்றி உள்ளாா். கிரேசி 12-ஆம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments