FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேல்பூரி - 13-09-2026

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஆட்டோவில் கண்ட வாசகம்

12 செப்டம்பர் 2026, 8:03 pm IST
பகிர்:

கண்டது...

(நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஆட்டோவில் கண்ட வாசகம்)

'இந்த உலகில் சந்தோஷமாக இருப்பவர்கள் இருவர்...

Advertisement

Advertisement

ஒருவர் கல்யாணம் பண்ணாதவர்; மற்றவர் செல்போன் இல்லாதவர்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

(வேலூரில் வேன் ஒன்றில் இடம்பெற்றிருந்த வாசகம்)

'வான் மழையால் உலகம் செழிக்கும்...

கருணை மழையால் மனிதம் சிறக்கும்!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'நமஸ்கரித்தான்பட்டி.'

- ச.ஜான்ரவி, கோவில்பட்டி.

கேட்டது...

(கோவையில் கட்சி அலுவலகம் ஒன்றில்)

'தலைவருக்கு ரொம்ப காஸ்ட்லியான மாலை போட்டீங்களாமே?'

'ஆமா... சின்ன வெங்காயமும் பெரிய வெங்காயமும் கோத்துக் கட்டி மாலை போட்டோம்!'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

( மதுரை பேருந்தில் இருவர்)

'பத்து வருஷமா கொடுத்த வீட்டு வாடகைக்கு சொந்தமாக வீடே வாங்கி இருக்கலாம்!'

'நீ வேற... நான் வாங்கிய வீட்டுக் கடனுக்கு பத்து வருஷமா வட்டிதான் கட்டிக்கிட்டு இருக்கேன்... அசல் அப்படியே இருக்கு!'

-நா.குழந்தைவேலு, மதுரை.

யோசிக்கிறாங்கப்பா...

'பொய்க்கு ஆரம்பம் இல்லை. ஆனால், முடிவு உண்டு.

உண்மைக்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவு இல்லை.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments