FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

""இதுதான் எனது முதல் தொடர். திரைத்துறையில் எனது முதல்என்ட்ரியும் இதுதான்.

Updated On : 9 செப்டம்பர் 2020, 12:00 am IST
பகிர்:

ராதிகா

""இதுதான் எனது முதல் தொடர். திரைத்துறையில் எனது முதல்என்ட்ரியும் இதுதான்.

அடிப்படையில் நான் ஸ்போர்ட்ஸ் ப்ளேயர். இந்தியாவிற்காக நிறைய விளையாடி இருக்கிறேன். தேசிய அளவில் 5 முறை த்ரோபால் விளையாடி இருக்கிறேன். மாநில அளவில் பேட்மின்டனும், மாவட்ட அளவில் வாலிபாலும் விளையாடிருக்கிறேன்.

சர்வதேச அளவில் வாய்ப்புகள் வந்தபோது, போக முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் "பூவே உனக்காக' தொடரின் ஆடிஷனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இப்போ செலக்ட்டாகி உங்கள் முன் வந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

Advertisement

Advertisement

எனக்கு கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பு மிகவும் அரிதான வாய்ப்பு. காரணம், நான் தொடருக்காக தேர்வாவதற்கு முன்பு சுமார் 6 மாதங்கள் இந்த கேரக்டருக்கான ஆடிஷன் நடந்ததாம். இதில் பூவரசி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரம் என்னுடையது.

இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பு குழுவுக்கும் என்னுடைய நன்றி.

தொடர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. முதல் நாள் ப்ரோமோவை பார்த்துவிட்டு மறுநாள் காலை தெருவில் உள்ள சில குழந்தைகள் என்னை அடையாளம் கண்டு பேசியது ரொம்ப ரொம்ப ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது ' என்கிறார் ராதிகா.

------------------------------------------------------------------------------------------

சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் புதிதாக தொடங்கியிருக்கும் தொடர் "பூவே உனக்காக' இத்தொடரில் நாயகிகளாக நடிக்கும் ஜோவிதா (கீர்த்தி), ராதிகா (பூவரசி) இருவரும் இத்தொடர் குறித்து பகிர்ந்து கொண்டவை:

ஜோவிதா

""திரைத்துறையில் இதுதான் எனது முதல் அறிமுகம். ஆனால் எங்கள் குடும்பத்திற்கு திரைத்துறை புதிதல்ல, நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நான். என்னைப் பொருத்தவரை இந்த தொடரின் வாய்ப்பு கனவு நனவானது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் நான் சீரியலில் நடிப்பேன் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது ஆர்வம் அதிகம். ஆனால், அப்பாவுக்கு அதில் உடன்பாடில்லை. அதனால், ஒருவித தயக்கத்துடனும், பயத்துடனும்தான் நடிப்பு துறைக்குள் வந்திருக்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஆடிசன் முடிந்த மறுநாளே சூட்டிங் போய்விட்டேன். இப்போது நினைத்தாலும் கனவு போன்றுதான் இருக்கிறது. நட்புக்கு மரியாதை கொடுக்கும் கதைக் கரு கொண்டது இந்தத் தொடர்.

இதில், காதலைத் தாண்டி ஆழமான நட்பு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதுபோன்று எல்லா தரப்பு வயதினரும் விரும்பி பார்க்கக் கூடிய தொடராக நிச்சயம் இது இருக்கும். இதில் கீர்த்தி என்ற கதாபாத்திரம் என்னுடையது. மிடில் கிளாஸ் நகரத்து பெண்ணாக துறு துறுவென வருகிற கேரக்டர். மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments