FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்!

நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல்கிறோம். சிறுகுடலின் முன்பகுதியில் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர் தான்.

Updated On : 11 ஜனவரி 2022, 1:45 pm IST
பகிர்:

நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல்கிறோம். சிறுகுடலின் முன்பகுதியில் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர் தான்.

அல்சர் ஏற்பட்டால், வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உள்பட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.

உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை விட உள்ளே பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்கள் பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புண்களை கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.  

Advertisement

Advertisement

இதனை கட்டுப்படுத்த ஒரு சில பழங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்: 

ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்  உள்ளது. இது, உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில்  எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.

மாதுளை ஜூûஸ குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்னைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது.

பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் உதவுகின்றது.

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம். 

நெல்லிக்காய் ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற ரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments