பப்பாளி வடை
உளுந்தை முதல் நாள் இரவில் ஊற வைத்து கொள்ள வேண்டும். காலையில் அதை மிக மிருதுவாக அரைக்கவும்.
தேவையானவை :
உளுந்து - 1 கிண்ணம்
பப்பாளி துண்டுகள் -அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு,
மிளகு - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி- தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம்- அரை கிண்ணம்
அரிசி மாவு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
Advertisement
Advertisement
உளுந்தை முதல் நாள் இரவில் ஊற வைத்து கொள்ள வேண்டும். காலையில் அதை மிக மிருதுவாக அரைக்கவும்.
பின்னர், அதில் உப்பு, பெருங்காயம், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கி, லேசாகக் கலந்து கொள்ளவும்.அதில் கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பிசையவும். அத்துடன் துண்டுகளாக நறுக்கி வைத்து பப்பாளியை சேர்க்கவும். அதனுடன் அரிசி மாவு சேர்த்து சிறிது நேரம் மாவை வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும். இப்போது மாவு கலவையை எடுத்து மையத்தில் ஒரு துளை செய்து எண்ணெய் கொதிக்கும் போது அதில் போட்டு நன்கு வேகவிடவும். சுவையான பப்பாளி மெது வடை தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.