கோவைக்காய் பச்சாடி
முதலில் கோவைக்காய்களையும், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
கோவைக்காய்- 50 கிராம்
கெட்டித் தயிர்- 100 மி.லி.
கேரட்- 1
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 3
உப்பு- சிறிதளவு
கொத்தமல்லி இலை- சிறிதளவு
தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
முதலில் கோவைக்காய்களையும், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.