FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

டிப்ஸ்... டிப்ஸ்...

கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பிறகு எடுத்துத் துருவினால், கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.

Updated On : 5 ஏப்ரல் 2026, 4:00 am IST
பகிர்:

கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பிறகு எடுத்துத் துருவினால், கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.

உருளைக்கிழங்கை அரைத்துச் சேர்த்து வடை செய்தால், வடையின் சுவையே அலாதி தான்.

கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு மேஜை கரண்டி ஓமம் கலந்து செய்யலாம். சுவையாக இருப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும்.

Advertisement

Advertisement

வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு மேஜை கரண்டி சீரகப் பொடி சேர்த்தால் குழம்பு சுவை மிகுந்திருக்கும்.

-ஆர். கீதா, ஆலுவா.

பாப்கான் நமத்துப் போய்விட்டால் பொட்டுக்கடலைக்குப் பதிலாக சட்னிக்கு வைத்து அரைக்கலாம்.

தோசை ஊற்றும்போது, சின்ன குழந்தைகளுக்கு சின்ன சின்னதாக ஊற்றி, தேனை மேலே ஊற்றியோ, நாட்டுச் சர்க்கரை தூவியோ, வாழைப்பழத்துடனோ கொடுக்க விரும்பிச் சாப்பிடுவர்.

ஓட்ஸை ஊற வைத்து அரைத்து உடன் உளுந்து மாவு, வெள்ளை ரவை, உப்பு சேர்த்துக் கலந்து தோசை வார்க்க மிருதுவாக இருக்கும்.

-மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

உருளைக்கிழங்கை கறி செய்யும்போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது சோள மாவு சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments