தோப்பிலே...
தாத்தாவைத்த தென்னைமரம் தோப்பிலே
தகதகன்னு செவ்விளநீர் குலையிலே!
தீட்டிவைத்த அரிவாளினால் வெட்டலாம்
தென்னைஓலை நறுக்குவைத்தே குடிக்கலாம்!
பாட்டிவைத்த கொய்யாமரம் நடுவிலே
பழுத்திருக்கு கொய்யாப்பழம் கிளையிலே!
Advertisement
Advertisement
ஆட்டிவிட்டால் வந்துவிழும் தரையிலே
ஆசைப்பட்ட கொய்யாப்பழம் தின்னலாம்!
அப்பாவைத்த மாமரமும் அருகிலே
அதுநிறைய காய்த்துமரம் குலுங்குதே!
கட்டிவைத்த துறட்டியினால் பறிக்கலாம்
கற்கண்டாய் இனிக்கும்பழம் தின்னலாம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.