ஞாயிறு கொண்டாட்டம்

கற்றுக்கொள்ள வேண்டிய தற்காப்புக்கலை

டோக்வாண்டோ ஆயுதங்கள் இல்லாத ஓர் தற்காப்பு கலை. இதனுடைய பிறப்பிடம் கொரியா. வெற்று கைகள் மற்றும் காலைக் கொண்டு சண்டையிடுதல்.

ராம்


டோக்வாண்டோ ஆயுதங்கள் இல்லாத ஓர் தற்காப்பு கலை. இதனுடைய பிறப்பிடம் கொரியா. வெற்று கைகள் மற்றும் காலைக் கொண்டு சண்டையிடுதல். இந்த கலையை சென்னையில் பயிற்றுவித்து வருபவர்கள் சுரேஷ் குமார்-மஞ்சுளா தம்பதிகள். 

இவர்கள் பயிற்றுவித்த மாணவர்கள் 32 பேர் கோவாவில் நடைபெற்ற 36-ஆவது தேசிய டோக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டனர். 14 மாநிலங்களை சேர்ந்த 450 பேர் இதில் பங்கேற்றனர். இதில் சென்னை மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 77 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் 8 தங்கம், 18 வெள்ளி, 51 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர். 

""உலகின் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த ராணுவ வீர்ர்கள் இந்த கலையை கற்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த கலை உலகின் பல்வேறு நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த கலையில் கால்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தக் கலையை பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார்கள் சுரேஷ்-மஞ்சுளா தம்பதிகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

அன்புக்கும் சிரிப்புக்கும்... நிமிஷிகா!

மகளிர் உலகக் கோப்பை: மழையால் டாஸ் பாதிப்பு!

பூக்களிடையே பூத்தவள்... பாயல் தாரே!

SCROLL FOR NEXT