FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரசிகர்களுடன் உரையாடிய ஷாருக்கான்

'பதான்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்து வரும் படம் 'ஜவான்'. அட்லீ எழுதி இயக்குகிறார்.  

2 பிப்ரவரி 2024, 12:28 am IST
பகிர்:

'பதான்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்து வரும் படம் 'ஜவான்'. அட்லீ எழுதி இயக்குகிறார்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான 'ஜவான்' படம் குறித்து, பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 'ஜவான்' எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில்  ரசிகர்களுடன் ஷாருக்கான் உரையாடினார். அப்போது 'ஜவான்' படம் குறித்தும் ,அதன் வெளியீட்டு தேதியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்.. ரசிகர்கள் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 'ஜவான் ஏன் தாமதமாகிறது?' என்று கேட்டதற்கு,'' பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை'' என்று கூறியதுடன், '' படக்குழுவினர் அனைவரும் இடைவேளையின்றி பணியாற்றி, தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.'' என்றும் குறிப்பிட்டார்.

'ஜவானில் எது மிகவும் பிடிக்கும்?' என்று கேட்ட போது, '' என்னைப் பொறுத்தவரை இது ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லீ மற்றும் அவரது குழுவினர் தான் மாஸ். அவர்களின் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தான் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியது'' என்றார். 'ஜவான்' பட போஸ்டரில் ஷாருக்கானை ஏன் காணவில்லை?, என யோசிப்பவர்களுக்கு, அவரது பெயர் மட்டும் போதும் என தயாரிப்பாளர்கள் உணர்ந்ததாகவும், ஜவானில் நடித்திருக்கும் சக நடிகர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் ஷாருக்கான் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments