புது முயற்சி..!
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...' என்று பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்றுவிப்பார்கள்.
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...' என்று பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்றுவிப்பார்கள். தற்போது மாணவர்கள் நாகரிகம் என்ற பெயரில் விதவிதமாக தலைமுடியை ஸ்டைல், ஸ்டலைாக வெட்டிக் கொண்டு வருகின்றனர்.
இதற்காக, நூதன முறையில் சிகை அலங்கார நிபுணர்களைத் தேடி சென்று துண்டுப் பிரசுரங்களை அளிப்பதோடு, அவர்களுக்கு அறிவுரையையும் வழங்கி வருகிறார் பள்ளி ஆசிரியர் ச.சரவணன்.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூர் பெத்லகேம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராகப் பணிபுரியும் அவரிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
''பெத்லகேம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 330 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இந்தப் பள்ளியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முன்மாதிரி பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
தற்போது மாணவர்கள் தலைமுடியை பல்வேறு வடிவங்களில் வெட்டி வருவதால், மாணவர்களுக்கு கவனச் சிதறலும், ஒழுக்கச் சீர்கேடும் ஏற்பட்டுவருகிறது.
மாணவர்கள் தங்கள் தலையில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒரு பக்கம் முடி வெட்டுதல், ஸ்பைக், டாப் கட்டிங், லைன் கட்டிங், போன்ற முறையில் தலைமுடி வெட்டுவதைத் தவிர்த்துவிட்டு பள்ளிச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவெட்டி கொண்டு வருமாறு பள்ளி ஆசிரியர்களான நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.
பள்ளி வகுப்பறைகளிலும், இறைவணக்கக் கூட்டங்களிலும் எப்போதும் மாணவர்களுக்கு அறிவுறுத்துவதோடு, அதுபோன்ற வரும் மாணவர்களையும் தனித்தனியே அழைத்தும் அறிவுரை கூறினோம்.
பெற்றோர்கள், மாணவர்களிடம் பலமுறை கூறியும் ஒரு சிலர் அதனை பின்பற்றவில்லை. இதனால் மாற்றுவழியை யோசித்தோம். பெத்தலகேம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிகை அலங்காரக் கடைகளில் பணியாளர்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்துள்ளோம்.
அவர்களிடம் மாணவர்களுக்கு தலைமுடியை வெட்டும்போது முறைப்படுத்தி பள்ளிச் சூழலுக்கு ஏற்றார் போல, வெட்டி விடுமாறு அறிவுறுத்தினோம்.
தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்கிறார் சரவணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.