FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பச்சைநிற ஆமைகள்

அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் ஒன்றான 'ஹவாய்த் தீவுகள்', தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பல வியப்புகளில் ஒன்று இங்கு மட்டும் காணப்படும் கடல் ஆமைகள்.

Updated On : 26 ஜூலை 2026, 4:05 am IST
ஆமைகள்
பகிர்:

முனைவர் ஜி.குமார்

அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் ஒன்றான 'ஹவாய்த் தீவுகள்', தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பல வியப்புகளில் ஒன்று இங்கு மட்டும் காணப்படும் கடல் ஆமைகள்.

பொதுவாக, கடல் ஆமைகளில் ஏழு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று ஹவாய்த் தீவுகளில் உள்ள பச்சைநிற கடல் ஆமைகள். அவற்றை ' ஹோனு' என ஒரு பக்தி கலந்த அன்புடன் ஹவாய்த் தீவுகளில் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

'ஹோனு' என்பதற்கு சகிப்புத் தன்மை, அதிர்ஷ்டம், புத்திக்கூர்மை என்றெல்லாம் பொருள்படும். மூதாதையர்களை நினைவூட்டும் ஆன்மிகச் சக்தி என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. தீவுகளில் சில பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள பழங்காலச் சிற்பங்கள் அந்தக் கடல் ஆமைகளுக்கு வழிவழியாக அளித்து வரும் மரியாதைகளைப் புலப்படுத்துகின்றன. பழங்காலத்தில் படகுகளுக்கும் சிறிய பாய்மரக் கப்பல்களுக்கும் அவை வழிகாட்டியாகவும் அமைந்திருக்கின்றன.

பெண் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தருணத்தில் மட்டும் கடலைவிட்டு மெதுவாக கரையில் ஏறுகின்றன. அந்தப் பச்சை நிற ஆமைகள் பாலின வேறுபாடின்றி நடந்து கொள்ளும் விதமும் ஆச்சரியத்திற்குரியது. அவை தினம்தோறும் நீரிலிருந்து ஏறி கரையை அடைகின்றன. கரையில் நீண்ட நேரம் அசைவற்று நின்று பகலில் குளிர் காய்கின்றன. இத்தகைய இயக்கம் இந்த 'ஹோனு' எனப்படும் பச்சை நிற ஆமைகளிடம் மட்டுமே, இவை பரவலாக ஹவாய்த் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

அவை தத்தம் உடல் வெப்ப நிலையை சீராக்கிக்கொள்ள இத்தகைய குளிர் காய்தலை மேற்கொள்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த உடல் ஓய்வு, அவைகளைக் கடலில் வேட்டையாடும் சுறா, சீல் ஆகியவைகளிடமிருந்து தப்பிக்க, உடலில் ஜீரண மண்டலங்களைச் சரிப்படுத்த, நோய் எதிர்ப்புச் சக்திகளைத் தர எனப் பல்வேறு காரணங்களும் இதன் பின்னால் உள்ளன. தொடர்ச்சியாக 48 மணி நேரம்கூட இந்த ஆமைகளைக் கரையில் காணலாம்.

இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க ஹவாய் மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளம்பருவத்தில் இவை கடல் மீன்களை உணவாகக் கொண்டாலும் முதிர்ச்சி அடைந்ததும் கடல்பாசிகளை மட்டுமே உண்டு வாழ்கின்றன. கரையோரங்களில் உள்ள பாறைகளில் அடர்ந்த பாசிகள் இருப்பதும் இவை கரையை அடைவதின் மற்றுமொரு நோக்கமாகும். பாசிகள் ஆமையின் உடலில் செரிக்கும்போது, சிவப்பு நிற திரவமாக மாறுகின்றன. சில ஆமைகள் அந்த திரவத்தை வெளியில் வடிக்கும்போது ரத்தமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.60 முதல் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இந்த ஆமைகள் மூன்றிலிருந்து நான்கு அடிகள் நீளமும், 60 முதல் 180 கிலோ எடையும் கொண்டவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments