வரலாற்றுச் சாதனை
இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ்.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கோட்டயம் அருகேயுள்ள அயமனம் கிராமத்தில் 1886 ஆகஸ்ட் 2-ஆம் தேதி பிறந்த இவர், மருத்துவத் துறையில் பல்வேறு தடைகளைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்டிலும், பின்னர் மகாராஜாஸ் கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர், 'கேரளாவின் முதல் பெண் பட்டதாரி' என்ற பெருமையைப் பெற்றார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து மருத்துவப் படிப்பை மேற்கொண்டு, அக்காலத்தில் பெண்கள் மருத்துவக் கல்வி பெறுவதில் இருந்த தடைகளையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் கடந்து மருத்துவத் துறையில் கால்பதித்தார்.
தைக்காட்டில் 1917-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகப் பணியாற்றிய மேரி பூனன் லூக்கோஸ், பெண்களுக்கான மருத்துவச் சேவையில் முக்கியப் பங்காற்றினார்.
திருவனந்தபுரத்தில் 1920-ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட சிசேரியன் அறுவைச் சிகிச்சை, இந்திய மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இதன் மூலம் 'இந்தியாவில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்த முன்னோடி பெண் மருத்துவர்' என்ற பெருமையையும் பெற்றார்.
பொதுச் சேவையிலும் மேரி பூனன் லூக்கோஸ் சிறந்து விளங்கினார். 1922-ஆம் ஆண்டில் சட்டப் பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், திருவிதாங்கூர் சட்டப்பேரவையில் இடம்பெற்ற முதல் பெண் உறுப்பினர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றார்.
அவரது மருத்துவப் பணிக்கும் சமூகப் பங்களிப்புக்கும் அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்த டாக்டர் மேரி பூனன் லூக்கோஸ், 1976 அக்டோபர் 2-ஆம் தேதி தனது 90-ஆவது வயதில் மறைந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.