தாத்தா கடை!
நாகை மாவட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் பிரதான சாலையில் அமைந்துள்ள தென்னம்பலம் அகரன்காடு பகுதியில், ஆறு ஆண்டுகளாக பழச்சாறு கடையை நடத்தி வருகிறார் அறுபத்து ஏழு வயதான என். லோகநாதன்.
நாகை மாவட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டி (கரியாப்பட்டினம் வழி) - வேதாரண்யம் பிரதான சாலையில் அமைந்துள்ள தென்னம்பலம் அகரன்காடு பகுதியில், ஆறு ஆண்டுகளாக பழச்சாறு கடையை நடத்தி வருகிறார் அறுபத்து ஏழு வயதான என். லோகநாதன். வெயிலின் கடுமையான தாக்கத்துக்கு இதமளிக்கும் வகையில் இவர் நடத்தி வரும் பழச்சாறு விற்பனைக் கடையானது, தாத்தா கடை' என்று அழைக்கப்படுகிறது.
மனிதாபிமான செயல்களால் வாடிக்கையாளர்களால் பாராட்டப்படும் அவரிடம் பேசியபோது:
மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளில் 1982-1994 காலகட்டத்தில் வேலை பார்த்தேன். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பி, ஆறு ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறேன்.
Advertisement
Advertisement
மலேசியா, சிங்கப்பூர் எனப் பல நாடுகளிலும் தேநீர், குளிர்பானம், பழச்சாறு போன்றவை தனி நபர் ஒருவருக்கு அதிக அளவாகவே கொடுக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் எல்லா அளவுகளும் குறைந்துவிட்டது. இப்படிப் பருகினால் அதனால் பலன் இல்லை. லாபம் குறைவாக இருந்தாலும் மக்களுக்குத் திருப்தியாக கொடுக்க வேண்டும் என்று எண்ணத்தோடு கொடுத்து வருகிறேன்.
சாத்துக்குடி, தர்பூசணி, கிர்ணி, அன்னாசிப் பழங்களில் சாறு பிழிந்து கொடுப்பது மற்ற கடைகளைப் போல வழக்கமானதுதான். ஆனால், அதன் ருசியும் அளவும் பிறகடைகளில் இல்லாத வகையில் நான் மாறுபட்டு வழங்கிவருகிறேன்.
பழச்சாறு பருகும் குவளையுடன் ஓர் அலுமினிய குண்டானில்தான் அதிக அளவாக சாறு வழங்கப்படுகிறது. மற்ற கடைகளில் அதை நான்கு பேர் பருகலாம். ஒருவருக்கான சாத்துக்குடி பழச்சாறு ரூ.50. இருவர் என்றால் ரூ.80, மூவருக்கு ரூ.100 என்ற அளவில் அதற்கு ஏற்ற அளவில் கொடுக்கிறார். திருச்சியிலிருந்து நேரடியாக பழங்களை கொள்முதல் செய்கிறேன். எனது கடைக்கு ஒருமுறை வந்தவர்கள் அடுத்த முறை தேடி வருவது அதிகரித்து வருகிறது.
எனது தொழிலுக்கு நிதியுதவி செய்த லண்டன் தொழிலதிபர் அருள் என்பவரின் பிறந்த நாளில் அனைவருக்கும் பழச்சாறு இலவசம்தான். விலை ஏற்றம், தட்டுப்பாடு எனப் பல காரணங்களால் விலைவாசி மிகவும் அதிகரித்தாலும், விலையை ஏற்ற மாட்டேன். குறைந்த லாபமே எனக்குப் போதுமானது'' என்கிறார் லோகநாதன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.