FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகம் பலவிதம் - 27-09-2026

தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே போகிறது. வெள்ளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், வைரத்தின் விலை சரிந்து வருகிறது.

27 செப்டம்பர் 2026, 4:51 pm IST
தங்கம் | வெள்ளி | வைரம்
பகிர்:

தங்கம் உயருது... வைரம் குறையுது!

தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே போகிறது. வெள்ளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், வைரத்தின் விலை சரிந்து வருகிறது.

இயற்கை வைரத்தின் விலை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்துள்ளது. வைரத்தின் விலை இந்த அளவுக்கு சரிந்து வந்திருப்பது இந்த நூற்றாண்டில் இதுவே முதல் முறை.

Advertisement

Advertisement

இதற்கு மூன்று காரணங்கள் சொல்கிறார்கள். வைரம் வாங்க ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சந்தைக்கு வைரங்கள் வரத்து அதிகமாகிவிட்டது. இயற்கை வைரத்துக்குப் போட்டியாக செயற்கை வைரங்கள் மலிவான விலையில் சந்தைக்கு வந்துவிட்டன. வைரங்கள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதால், இப்போது செயற்கை வைரங்களின் விலையும் சரியத் தொடங்கிவிட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் 75 சதவீத விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆஞ்சனேயர் சிலை

ஆஞ்சனேயர் மீது என்ன கோபம்?

அமெரிக்காவில் டெக்சாஸ் அருகே சுகர் லாண்ட் என்ற இடத்தில் ஸ்ரீஅஷ்டலட்சுமி கோயில் உள்ளது. இங்கே 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 90 அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை நிறுவப்பட்டது. இந்தக் கோயில் இடம் இந்திய வம்சாவளிகள் ஏற்படுத்திய அறநிலைக்கு உரியது.

அந்த இடத்தில்தான் சிலை வைத்துள்ளார்கள். இந்நிலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜெஸ்ஸி ஹக்ஸ் என்பவர், தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சிலையை அகற்றுவோம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பதிவுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் பொதுவான அமெரிக்கர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

'தேர்தலை ஏன் மதப் பிரசாரமாக மாற்றுகிறீர்கள்?' என்று கண்டித்துள்ளனர். 'எங்களுக்கு உரிய இடத்தில் நாங்கள் சிலை வைத்துள்ளோம். இதில் உனக்கு என்ன சிக்கல்? உனக்கேன் கோபம்?' என்று கேட்டுள்ளனர்.

காற்றாலை விசிறி

118 மீட்டர் நீளம்

நெடுஞ்சாலைப் பயணத்தின்போது காற்றாலை விசிறி அல்லது இறக்கைகள் ஏற்றப்பட்ட லாரிகள் மெல்ல ஊர்ந்து செல்வதைக் காணலாம். லாரியை காற்றாலை விசிறிக்கு ஏற்ப பிரத்யேகமான மாற்றங்களை செய்திருப்பார்கள். ஆனால், 118 மீட்டர் நீளமும் 40 டன் எடையும் கொண்ட காற்றாலை விசிறியைக் காண நேர்ந்தால் எப்படி இருக்கும்!

சீனாவின் சென்சோவ் நகர மலைப்பகுதியில் உள்ள காற்றாலைக்கு 118 மீட்டர் நீள காற்றாலை விசிறியை லாரியில் கொண்டு செல்லும் விடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. பார்த்தவர்கள் பிரமித்துப்போனார்கள்.

இதைக் கொண்டு சென்ற லாரி ஹைட்ராலிக் மல்டி ஆக்ஸில் தொழில்நுட்ப வசதி கொண்டது. ஆகவே இடத்துக்கு ஏற்ப இந்த விசிறியை உயர்த்தி நிற்க வைக்கவும் அல்லது படுத்த நிலையில் திசைக்குத் திருப்பவும் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments