மயங்கொலிச் சொற்கள்
(ண, ன பொருள் வேறுபாடு) அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை,
(ண, ன பொருள்
வேறுபாடு)
அணல் - தாடி, கழுத்து
Advertisement
Advertisement
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் -
அண்டை,
அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை -
படுக்கை,
அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் -
சோறு,
அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் -
சேய்மைச் சுட்டு,
ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி -
எழுத்தாணி,
இரும்பாணி
ஆனி -
தமிழ் மாதங்களுள்
ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் -
ஆடவன்,
(அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி -
உண்பவன்,
ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் -
வலிமை,
ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் - எழுத்துச்சாரியை
(சொற்கள் வளரும்...)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.