இழிவாக பேச மாட்டார் மேன்மக்கள்
நாயானது நம்மீது கோபித்து நம்மைக் கெளவிக் கொள்ளுதலைக் கண்டும், அதனாற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயை நாம் நம் வாயாற் கெளவுதல் இந்த உலகத்திலே இல்லை.
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும், தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை, நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற், சொல்பவோ,
Advertisement
Advertisement
மேன்மக்கள் தம்வாயான் மீட்டு?.
(பாடல் 70 அதிகாரம்: சினம் இன்மை)
நாயானது நம்மீது கோபித்து நம்மைக் கெளவிக் கொள்ளுதலைக் கண்டும், அதனாற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயை நாம் நம் வாயாற் கெளவுதல் இந்த உலகத்திலே இல்லை.
அதனால், கீழ்மக்கள், குணம் உடையதல்லாமல் கீழ்த்தரமான பேச்சுக்களையே பேசினாலும், அதனால் சினங்கொண்டு மேன்மக்கள், திரும்பவும் தம் வாயால் அவர்களை அப்பேச்சுக்களால் ஏசுவார்களோ?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.