FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கக் கோரிக்கை

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
பகிர்:

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. மற்ற நாடுகளில் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் 38 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்கான தடை தொடா்கிறது.

கள் ஒரு உணவு, கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசமைப்பு சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இதற்கு மாறாக கள்ளுக்கான தடை இருப்பது அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.

Advertisement

Advertisement

கள் கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணத்தைக் காட்டி அதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கள்ளுக்குத் தடை இல்லை. அந்த அரசுகள் எல்லாம் கலப்படத்தைக் கட்டுப்படுத்துகின்றபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே, அரசமைப்பு சட்டத்தையும், உலகளாவிய நடைமுறையையும் ஏற்று கள்ளுக்கான தடையை நீக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments