வறுமையை சொல்ல வேண்டாம்
உடலானது வற்றி உலர்ந்துபோகும் அளவுக்கு மிகுதியான பசித்துயரமானது ஏற்பட்டாலுங்கூடப், பண்பில்லாதவர்களுக்குத் தமது வறுமையை அறியும்படியாகச் சொல்ல வேண்டாம்.
வற்றி, மற் றாற்றப் பசிப்பினும், பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க!-அற்றம்
மறைக்குந் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத்
Advertisement
Advertisement
துறக்குந் துணிவிலா தார்.
(பாடல் 78 அதிகாரம்: பொறை உடைமை)
உடலானது வற்றி உலர்ந்துபோகும் அளவுக்கு மிகுதியான பசித்துயரமானது ஏற்பட்டாலுங்கூடப், பண்பில்லாதவர்களுக்குத் தமது வறுமையை அறியும்படியாகச் சொல்ல வேண்டாம். மிகுதியான துயரம் வந்த காலத்தில் தம் உயிரை விட்டுவிடும் துணிவில்லாதவர்கள் தமது வறுமையை அதனை நீக்கவல்ல நண்பர்களுக்குச் சொல்லுவார்கள். மிக்க வறுமை நேர்ந்தவிடத்தும், பெரியோர் அதனைப் பொறுத்துக் கொண்டு உயிரையேனும் விட்டு விடுவார்களே அல்லாமல் பிறரிடம் சொல்லமாட்டார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.