குருவாயூர் கோயில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனம்!
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குருவாயூர் கோயிலில் சிறப்பு தரிசனம்..
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு வரும் வயதான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், மூத்த குடிமக்களுக்கான தனி தரிசன வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கான நேர விவரங்களையும் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் அனுமதிக்கப்படுவர். ஞாயிற்றுக்கிழமைகள், அனைத்துப் பொது விடுமுறை நாள்களில் சிறப்பு தரிசனம் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடைபெறும்.
Advertisement
Advertisement
தரிசனத்துக்காகச் செல்லும் மூத்த குடிமக்கள், வயது நிரூபிக்கும் அடையாள ஆவணத்தைக் காட்டினால், கோயில் நிர்வாகத்தின் தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் அன்றைய நடைமுறைகளைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.