இந்தியா உள்பட 42 நாடுகளில் 'ஏஒய் 4.2' புதிய வகை கரோனா: உலக சுகாதார அமைப்பு தகவல்
உருமாறிய புதிய வகை கரோனா வைரஸான ஏஒய்.4.2 வகை 42 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உருமாறிய புதிய வகை கரோனா வைரஸான ஏஒய் 4.2 வகை 42 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பல்வேறு வகைகளில் உருமாறி வருகிறது. அந்தவகையில், தற்போது உருமாறிய புதிய வகை கரோனா வைரஸான ஏஒய் 4.2 வகை பிரிட்டனில் அதிகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவிலும் ஆந்திரத்தில் 7 பேர், கேரளத்தில் 4 பேர், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் தலா இருவர், மகாராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவர் என 17 பேருக்கு இந்த புதிய வகை கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் மொத்தமாக 42 நாடுகளில் ஜூலை 21 முதல் அக்டோபர் 25 வரை 26,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில், 93% பாதிப்பு பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வகை கரோனா பாதிப்பு உள்ளது.
டெல்டா வகை கரோனாவைவிட ஏஒய் 4.2 வகை கடும் பாதிப்பைக் கொண்டது என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கரோனா குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.