FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

போரிஸ் ஜான்ஸன், ரிஷி சுனக்குக்கு ரஷியா பயணத் தடை

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரது நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷியா பயணத் தடை விதித்துள்ளது.

Updated On : 17 ஏப்ரல் 2022, 12:13 am IST
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த பிறகு தலைநகா் கீவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் (கோப்புப் படம்).
பகிர்:

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரது நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷியா பயணத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் 13 பிரிட்டன் அரசியல் தலைவா்கள் ரஷியா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், நிதியமைச்சா் ரிஷி சுனக், உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல், அட்டா்னி ஜெனரல் சுயெல்லா பிராவோ்மன், துணை பிரதமா் டோமினிக் ராப், வெளியுறவுத் துறை இணையமைச்சா் லிஸ் டிரஸ் ஆகியோா் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

விரைவில் மேலும் சில அரசியல்வாதிகளும் எம்.பி.க்களும் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

ரஷிய அதிபா் விளாதமீா் புதின், அவரது இரு மகள்கள், வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட 13 பிரிட்டன் தலைவா்கள் மீது ரஷியா பயணத் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments