FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கரோனாவைவிட கொடூரமான வைரஸ்.. எச்சரிக்கும் சீன வைராலஜிஸ்ட்

சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எதிர்காலத்தில், கரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவும் அபாயமிருப்பதாக எச்சரித்துள்ளார்.

Updated On : 25 செப்டம்பர் 2023, 6:10 pm IST
பகிர்:


சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எதிர்காலத்தில், கரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவும் அபாயமிருப்பதாக எச்சரித்துள்ளார்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் பற்றிய ஆய்வின் மூலம் புகழ்பெற்றவர்  ஷி ஸெங்லி. ஆங்கில திரைப்படத்தின் பேட் உமன் என்ற பெயரால் இவர் அறியப்படுகிறார்.

ஒட்டுமொத்த உலகமும், கரோனாவை விட அதிக அபாயம் நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடத்தின், உருவெடுக்கும் தோற்று நோய்கள் மையத்தின் இயக்குநராக இவர் உள்ளார். இவர் கரோன தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.

இவரது குழுவினர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், 40 வகையான கரோனா வைரஸ்கள் மனித குலத்தை தாக்கவிருப்பதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்டவை மிகவும் அபாயமானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு போன்ற பயங்கர நிகழ்வுகள் தாக்கக் கூடும் என்றும் உலகத்தை இந்த ஆய்வுக் கட்டுரை எச்சரித்துள்ளது.

அதிகரிக்கும் வைரஸ்கள், மக்கள் தொகை, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வுகளுக்காக, வூஹான் ஆய்வுக்கூடம், மிக மோசமான வைரஸ்களைக் கொண்டு ஆய்வு நடத்துவதாகவும், அமெரிக்கா அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஃபெடரல் அமைப்பு திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments