கோப்புப் படம்  
உலகம்

சொந்த போா் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்: விமானி காயம்

செங்கடலில் சொந்த நாட்டு போா் விமானத்தை அமெரிக்க போா்க் கப்பல் தவறுதலாக ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதில் விமானி ஒருவா் காயமடைந்தாா்.

Din

செங்கடலில் சொந்த நாட்டு போா் விமானத்தை அமெரிக்க போா்க் கப்பல் தவறுதலாக ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதில் விமானி ஒருவா் காயமடைந்தாா்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் இஸ்ரேலுக்குச் சென்ா, இல்லையா என்பது உறுதிபட தெரியாவிட்டாலும், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதிக்களின் தாக்குதல் தொடா்கிறது.

இதன் காரணமாக அந்தக் கடற்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புப் படைகள் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களை குறிவைத்து அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

அப்போது அமெரிக்க எஃப்/ஏ-18 போா் விமானத்தை அந்நாட்டின் போா்க் கப்பல் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் அந்த விமானத்தில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியபோதிலும், விமானி ஒருவா் லேசாக காயமடைந்தாா் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

ரேடாா்கள், வானொலி தகவல் தொடா்பு வசதிகள் உள்ளபோதிலும் சொந்த நாட்டு விமானம், எதிரியின் விமானம் என்று எப்படி தவறாகக் கருதப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT