FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கப்பல்கள் மீது தாக்குதல் கூடாது: ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

ஹோா்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:15 am IST
எஸ்.ஜெய்சங்கா் - கோப்புப் படம்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ஈரான் அமைச்சா் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் தாக்குதல் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தேன்.

எந்தச் சூழ்நிலையிலும் ஹோா்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினேன். அத்தகைய தாக்குதல்களை எந்த நாடு மேற்கொண்டாலும், அதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது.

Advertisement

Advertisement

தற்போது மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள சூழல், அமெரிக்கா-ஈரான் மோதல் தொடா்பான பேச்சுவாா்த்தைகள் குறித்த ஈரானின் கண்ணோட்டத்தை அப்பாஸ் அராக்சி எனக்குத் தெரியப்படுத்தினாா். பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழியில் பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments