ஆசிய அமெரிக்கர்களிடையே கமலா ஹாரிஸுக்கு அதிகரிக்கும் ஆதரவு
அதிபர் தேர்தலில் ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் ஐலாண்டர் தீவுகளின் பூர்வகுடி மக்களிடையே (ஏஏபிஐ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் ஐலாண்டர் தீவுகளின் பூர்வகுடி மக்களிடையே (ஏஏபிஐ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஏஏபிஐ டேட்டா மற்றும் ஏபிஐஏவோட் நடத்திவரும் கருத்துக் கணிப்பில், பத்தில் ஆறு ஏஏபிஐ மக்கள் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் பிரிவு மக்களிடையே கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரித்துவருவதாக இந்தக் கருத்துக்கணிப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.