FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இஸ்ரேல் பிணைக் கைதிகளைப் பிணமாகப் பார்ப்பீர்கள்! ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை - இறங்கி வந்து இரக்கம் காட்டுமா இஸ்ரேல்?

Updated On : 25 மார்ச் 2025, 12:37 pm IST
- AP
பகிர்:

இஸ்ரேலிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்களை பிணைக்கைதிகளாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என்று இஸ்ரேல் அரசுக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக காஸாவில் நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் மார்ச் 19-ஆம் தேதி முறிந்தது.

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியிருப்பதுடன், காஸா பகுதியில் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் போர் நிறுத்தத்துக்குப் பின், காஸாவில் நடத்தப்பட்டுள்ள பல்வேறு கட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 670-ஐ கடந்துவிட்டதாக காஸாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கவனத்துக்குச் செல்லும் வகையில், ஹமாஸ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதொரு காணொலியில், இஸ்ரேலிய பிணைக் கைதிகளாகச் சிக்கியிருக்கும் எல்கானா போஹ்போட் மற்றும் யோசேஃப்-ஹைம் ஒஹானா ஆகிய இருவரையும் சித்ரவதைச் செய்ய முற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

சமூக வலைதளமான டெலிகிராமில் ஹமாஸ் பயன்படுத்தும் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த காணொலியில், ஹமாஸ் பிடியிலிருக்கும் அவர்கள் இருவரும் தாங்கள் எதிர்கொண்டு வரும் கடினமான சவால்களை எடுத்துச் சொல்லி போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அதில், ‘நேரம் விரைவாகக் கடந்து கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கின்றது ஹாமாஸ் தரப்பு. அத்துடன், ‘போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மட்டுமே உங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர வழிவகைச் செய்யும்’ என்று குறிப்பிட்டு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேலை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments