FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆபரேஷன் பிரம்மா: மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரணப் பொருள்கள் ஒப்படைப்பு!

ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு...

29 மார்ச் 2025, 4:11 pm IST
- படம் | வெளியுறவு அமைச்சகம் பதிவு
பகிர்:

புது தில்லி: ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ள மியான்மருக்கு ‘ஆபரேசன் பிரம்மா’ என்கிற பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானத்தில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன.

இந்த நிலையில், முதல் தொகுதியில் அனுப்பப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் மியான்மரின் யாங்கோன் முதல்வர் யூ சோ தெய்னிடம் இந்திய தூதர் அபய் தாக்குர் முறையாக ஒப்படைத்தார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அவற்றில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், ரெடிமேட் உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதாரப் பொருள்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் (பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கேனுலா, ஊசிகள், கையுறைகள், பஞ்சுகள், சிறுநீர் பைகள் உள்ளிட்ட பிற பொருள்கள்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments