நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
நேபாளத்தில் உணரப்பட்ட மிதமான நிலநடுக்கம் பற்றி...
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி மாகாணத்தில் உள்ள ரோல்பா மாவட்டத்தின் இரிவாங் கிராமப்புற பகுதியில் அதிகாலை 3.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
Advertisement
Advertisement
சல்யான், ருகும் மற்றும் பியூதன் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. எனினும் அதிகாலை வேளையில் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வு மக்களிடையே சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது.
An earthquake of 4.4 magnitude struck western Nepal's Rolpa district on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.