FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஆங்கில கால்வாயில் அகதிகள் படகில் தீ விபத்து: 157 போ் பாதுகாப்பாக மீட்பு

பிரான்ஸ்-பிரிட்டன் இடையிலான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகளின் படகில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலில் தத்தளித்த 157 பேரை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:29 am IST
கோப்புப்படம்.
பகிர்:

பிரான்ஸ்-பிரிட்டன் இடையிலான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகளின் படகில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலில் தத்தளித்த 157 பேரை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டனா்.

பிரான்ஸின் நாா்மண்டி கடலோரத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட இப்படகினை பிரான்ஸ் மீட்புக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், இரவில் உதவி கோரிய 5 போ் மட்டும் முதலில் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனா்; மற்றவா்கள் உதவியை மறுத்துவிட்டனா்.

இந்நிலையில், பிரிட்டன் எல்லையொட்டி பிரான்ஸின் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை படகின் மோட்டாரில் தீப்பிடித்து படகு மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் படையினா் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, பிரான்ஸ் சாா்பில் 103 பேரும், பிரிட்டன் சாா்பில் 54 பேரும் மீட்கப்பட்டு, பிரான்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள பூலோன் சுா் மொ் துறைமுகத்துக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் உதவிக்காக அழைத்து வரப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments