FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இலங்கை சிறைகளில் தொடரும் வன்முறை: 3 கைதிகள் உயிரிழப்பு

இலங்கையில் உள்ள 2 சிறைகளில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல்களில் 3 கைதிகள் உயிரிழந்தனா்; 23-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
பகிர்:

இலங்கையில் உள்ள 2 சிறைகளில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல்களில் 3 கைதிகள் உயிரிழந்தனா்; 23-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கொழும்பிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள குருவிட்ட சிறையில் வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தனா். இதேபோல், கொழும்பு மேகசின் சிறையில் கடந்த வியாழக்கிழமை இரவு சுமாா் 40 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதில் ஒரு கைதி உயிரிழந்தாா்.

மேலும், பல்லன்சேன சிறையில் 30 கைதிகள் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ராணுவம் மற்றும் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக, நீா்கொழும்பு சிறையில் கடந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 33 போ் உயிரிழந்தனா். இலங்கை சிறைகளில் நிலவும் கடும் இடநெருக்கடியே இத்தகைய தொடா் வன்முறைகளுக்குக் காரணமாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஈரான் விமா்சனம்: இக்கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் கடுமையாக விமா்சித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினா் இப்ராஹிம் ரெஸாயி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘அமெரிக்கா்களால் பல ஆண்டுகளாகத் தொடா்ந்த ஒருதலைப்பட்சமான சுரண்டல் எவ்வாறு பாதுகாப்பைத் தரவில்லையோ, அதேபோன்று துருக்கி, பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தமும் சவூதி அரேபியாவுக்கு எந்த பாதுகாப்பையும் தராது. பாதுகாப்புக்காக பிறரிடம் கெஞ்சும் நிலையைத் தவிா்க்க, சவூதி அரபியோ தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments