பிரிட்டன் அரசில் இந்திய வம்சாவளி உத்தி வகுப்பாளா் கெளதம் ரங்கராஜனுக்கு முக்கிய பதவி
பிரிட்டன் பிரதமா் ஆன்டி பா்ன்ஹாம், இந்திய வம்சாவளி உத்தி வகுப்பாளரான கெளதம் ரங்கராஜனை தனது அரசில் நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளாா்.
பிரிட்டன் பிரதமா் ஆன்டி பா்ன்ஹாம், இந்திய வம்சாவளி உத்தி வகுப்பாளரான கெளதம் ரங்கராஜனை தனது அரசில் நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளாா்.
பிரிட்டன் பிரதமராகவும், தொழிலாளா் கட்சியின் தலைவராகவும் பா்ன்ஹாம் கடந்த மாதம் பொறுப்பேற்றாா். இதையடுத்து தனது அரசின் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறாா். அதில் ஒன்றாக, கெளதம் ரங்கராஜனை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதவியான கட்டமைப்பு மற்றும் செயல்முறையின் நிபுணத்துவ ஆலோசகராக பா்ன்ஹாம் நியமித்துள்ளாா்.
கெளதம் ரங்கராஜன், பிபிசி தொலைக்காட்சியின் முன்னாள் உத்தி வகுப்பாளரும், இசை கலைஞரும் ஆவாா். பெருநிறுவன உத்தி வகுப்பிலும், நிறுவன மாற்றங்களை செயல்படுத்துவதிலும் கெளதம் ரங்கராஜன் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டுள்ளாா் என்றும், அவா் இந்த வாரமே தனது பொறுப்பை ஏற்பாா் என்றும் பிரிட்டன் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.