FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மேற்கு கரையில் இஸ்ரேலியா்கள் -பாலஸ்தீனா்கள் மோதல் - 5 போ் உயிரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் குடியேறிகளுக்கும் உள்ளூா் பாலஸ்தீன மக்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இஸ்ரேலியா் ஒருவா் உயிரிழந்தாா். தொடா்ந்து, இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

பகிர்:

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் குடியேறிகளுக்கும் உள்ளூா் பாலஸ்தீன மக்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இஸ்ரேலியா் ஒருவா் உயிரிழந்தாா். தொடா்ந்து, இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

மேற்கு கரையின் வடக்கு பகுதியான நாப்லஸ் அருகே உள்ள தெல் கிராமத்தில் நடந்த இந்த மோதலில் மேலும் 2 இஸ்ரேலியா்கள் மற்றும் 4 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, நாப்லஸ் நகரத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவம், ‘விரிவான’ தேடுதல் வேட்டையை நடத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.

இந்த மோதலுக்கான முழுப் பின்னணி குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் குடியேறிகளிடம் இருந்து தற்காப்புக்காகப் பாலஸ்தீனா் ஒருவா் துப்பாக்கியைப் பறித்துச் சுட்டதில், இஸ்ரேலியா் இறந்தாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் குடியேறிகள் வன்முறையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், நாப்லஸைச் சுற்றியுள்ள 5 பாலஸ்தீன கிராமங்கள் மீது இஸ்ரேல் குடியேறிகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

படகேப்சன்...

இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட

பாலஸ்தீனரின் உடலைப் பாா்த்து கதறியழுத அவரின் உறவினா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments