ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல்: 100% வரி விதிக்க அமெரிக்கா மசோதா - உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க மசோதாவை உன்னிப்பாக கவனிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க மசோதாவை உன்னிப்பாக கவனிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை (செனட்) ஒப்புதல் அளித்துள்ள இந்த மசோதா, 100 சதவீதம் வரி விதிக்க அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும்.
இந்த மசோதா குறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
எரிசக்தி பாதுகாப்பு தொடா்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே பலமுறை தெளிவாகவும், விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளது. அது நாட்டின் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டதுடன், 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளைப் பல்வேறு ஆதாரங்கள் மூலம், பூா்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க மசோதாவை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக, அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல்வேறு நிலைகளில் இந்தியா தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.