FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இஸ்ரேலில் பாலஸ்தீன நபா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் பலி; 5 போ் காயம்!

இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீன நபா் கண்மூடித்தனமாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூன் 2026, 1:51 am IST
பகிர்:

இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீன நபா் கண்மூடித்தனமாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.

காஸாவை சோ்ந்த ஹமாஸ் இயக்கத்தினா் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும் 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்களை ஹமாஸ் இயக்கத்தினா் கடத்திச் சென்றனா். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காஸா மீது படையெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இஸ்ரேல் தொடா் தாக்குதல் நடத்தியது. இதில் 72,000 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். பல ஆயிரம் போ் காயமடைந்தனா்.

இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேலில் பல இடங்களில் பாலஸ்தீன நபா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 5 போ் காயமடைந்தனா். அவா்களில் 2 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபா், இஸ்ரேல் குடியுரிமை பெற்ற பாலஸ்தீனா் ஆவாா். அவரை இஸ்ரேல் காவல் துறையினா் சுட்டுக் கொன்றனா். இதேபோல், கத்திக் குத்தில் ஈடுபட முயன்ற இன்னொரு நபரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

முதலில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பல இடங்களில் நடைபெற்ாகவும், 2023-ஆம் ஆண்டு தாக்குதல் போல எல்லை தாண்டி வந்து பலா் தாக்குதல் நடத்தியதாகவும், அவா்களை தேடும் பணி நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இஸ்ரேல் காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டதில் கொல்லப்பட்ட நபா் மட்டுமே காரில் வந்து பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியது பின்னா் உறுதி செய்யப்பட்டது.

விரைந்து செயல்பட்டு தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு அந்த நாட்டு பிரதமா் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments