முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 37 பேர் பலியாகி, 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Updated On : 9 ஜூன் 2026, 1:31 pm IST
நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடம் - AP
பகிர்:

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 37 பேர் பலியாகி, 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிலிப்பின்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு உருவான நிலநடுக்கம், ரிக்டரில் 7.8 என்ற அளவில் பதிவானது. நிலநடுக்கத்தால் இதுவரை 37 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

20,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அவசரகால தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

மக்கள் பலரும் சுனாமி தாக்கக்கூடும் என்ற பயத்திலேயே வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அங்குள்ள கடல்பகுதியில் சுனாமி அலைகள் 1.4 மீட்டர் அளவில் எழும்பியதால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய அண்டை நாடுகளின் கடலோரப் பகுதிகளிலும் சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவாகின.

பல மாகாணங்களில் கிட்டத்தட்ட 2,000 வீடுகளும், 117 அரசு கட்டிடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிந்து தரைமட்டமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் சாண்டோஸ் பகுதி விமான நிலையம் மூடப்பட்டு, மனிதாபிமான உதவிகளுக்கான விமானங்கள் மட்டுமே செயல்படுவதாகவும், உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிலிப்பின்ஸில் 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது. அப்போது உண்டான நிலநடுக்கத்தால் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

பிலிப்பின்ஸில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல பள்ளிகளில் மாணவர்கள் பயந்து அலரும் விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளை உடனடியாக முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளாா்.

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் அதிதீவிர நிலநடுக்க மண்டலத்தில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்களும்; எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

summary

An earthquake in the Philippines has killed 37 people and displaced more than 20,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.